நாட்டை விட்டு வெளியேறும் வரை அமெரிக்க படைகள் மீது தாக்குதல்கள் தொடரும்! ஈராக் போராளிகள் குழு எச்சரிக்கை
அமெரிக்க படைகள் மீதான தாக்குதல் தொடரும் என ஈராக் அரசியில் கட்சி மற்றும் போராளிகள் குழுவான Asa'ib Ahl al-Haq-ன் தலைவர் Qais Khazali எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மற்றும் தூதரக ஊழியர்களை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு மத்தியில் நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டு படைகளும் உடனடியா வெளியேற வேண்டும் என ஈராக் பாராளுமன்றம் மசோதா ஒன்றை நிறைவேற்றியது.
எனினும், அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெறுவதற்கான திட்டங்களை இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேறும் வரை அமெரிக்க படைகள் மீதான தாக்குதல்கள் தொடரும் என Qais Khazali எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈராக்கில் அமெரிக்க இராணுவ தளங்களுக்கு இடமே இல்லை. இந்த எதிர்ப்பு எங்களின் முடிவும் வாக்குறுதியும் ஆகும் என Qais Khazali கூறினார்.