கமலா ஹரிஸ் வீட்டில் கொள்ளை முயற்சி? இருவர் கைது
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியினரான கமலா ஹரிஸ் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கமலா ஹரிஸ் வீட்டில் கொள்ளை முயற்சி?
அமெரிக்காவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள லாஸ் ஏஞ்சல்ஸின் அருகில்தான் கமலா ஹரிஸின் வீடு அமைந்துள்ள Brentwood என்னுமிடம் அமைந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே, காட்டுத்தீயை பயன்படுத்திக்கொண்டு சிலர் வீடுகளுக்குள் நுழைந்து சூறையாடும் சம்பவங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. அது தொடர்பாக பொலிசாரும் பலரை கைது செய்துள்ளார்கள்.
இந்நிலையில், சனிக்கிழமை காலையில் கமலா ஹரிஸ் வீட்டில் யாரோ கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து அங்கு விரைந்த பொலிசார், அங்கிருந்த இருவரைக் கைது செய்துள்ளார்கள்.
ஆனால், அங்கு கொள்ளை முயற்சி எதுவும் நடந்ததற்காக அடையாளம் எதுவும் காணப்படவில்லையாம்.
என்றாலும், அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஊரடங்கை மீறியதற்காக அவர்கள் இருவரையும் கைது செய்த பொலிசார், பின்னர் அவர்களை விடுவித்துவிட்டார்கள்.
காரணம், கைது செய்யப்பட்ட அந்த இருவருக்கும், தாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதே தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |