பிரான்ஸ் திரைப்பட விழாவில் வேட்டி சட்டையில் கவனம் ஈர்த்த இந்திய அமைச்சர்: கூடவே பிரபல தமிழ் நடிகரும்...
பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வேட்டி சட்டையில் சென்று கவனம் ஈர்த்துள்ளார் இந்திய அமைச்சர் ஒருவர்.
ஆம், இந்திய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சரான L. முருகன், கேன்ஸ் திரைப்பட விழாவில், தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பங்கேற்றார்.
சிவப்புக் கம்பளத்தில் நடைபோட்ட அமைச்சருடன் கூடவே நம்ம நடிகர் பார்த்திபனும் நடைபோடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், பாரம்பரிய உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற அமைச்சர் L. முருகனை பாராட்டியுள்ளார் இந்தியப் பிரதமர் மோடி.
அவர் தனது உரையின்போது, தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தனான L. முருகன், பாரம்பரிய உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தில் நடைபோட்டு, நம் நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
Walked down the Red carpet of the #CannesFilmFestival along with Mr.@rparthiepan & Ms.@UrvashiRautela#IndiaAtCannes? #Cannes2022 pic.twitter.com/Ng8So7yNxh
— Dr.L.Murugan (@Murugan_MoS) May 23, 2022