அம்பானியின் பிரமாண்ட ஜியோ வேர்ல்ட் டிரைவ் மால்: Jaguars, Audis, BMWs உட்பட 40 சொகுசு கார்கள் பறிமுதல்
முகேஷ் அம்பானியின் வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 40க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் மும்பை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சொகுசு கார் பேரணி
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் பிரமாண்ட வணிக வளாகமான ஜியோ வேர்ல்ட் டிரைவ் மால்( Jio World Drive Mall) மும்பையில் அமைந்துள்ளது.
இங்கு தான் இந்தியாவின் முதல் Apple Store நிறுவப்பட்டது. இதன் பிரம்மாண்ட வடிவமைப்பு காரணமாக இதன் திறப்பு விழாவின் போது அனைத்து செய்திகளிலும் இந்த மால் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த ஜியோ வேர்ல்ட் டிரைவ் மால் சொகுசு கார் பேரணி தொடர்பாக மீண்டும் செய்திகளில் இடம் பெற்றுள்ளது. வெளியான அறிக்கைகளின் அடிப்படையில், குடியரசு தினமான ஜனவரி 26ம் திகதி நிகழ்ச்சி மற்றும் சமூக ஊடக நிறுவனம் சார்பில் சொகுசு கார் பேரணி ஒன்று நடத்த திட்டமிட்டு இருந்தது.
இந்த பேரணியானது பாந்த்ரா குர்லா வளாகத்தின்(Bandra Kurla Complex) ஜியோ வேர்ல்ட் டிரைவிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அடல் சேது(Atal Setu) வரை செல்ல திட்டமிட்டு இருந்தது.
ஆனால் ஜனவரி 23 முதல் பிப்ரவரி 6ம் திகதி வரை இந்த பேரணிக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
சொகுசு கார்களை கைப்பற்றிய பொலிஸார்
இந்நிலையில் தடையை மீறி ஜியோ வேர்ல்ட் டிரைவ் மால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த Ferraris, Lamborghinis, Porsches, McLarens, BMWs, Jaguars, Audis போன்ற 40க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை மும்பை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் கார் உரிமையாளர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188 அரசு அதிகாரிகளின் உத்தரவை மதிக்காததின் கீழ் மும்பை பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கையகப்படுத்தப்பட்ட சொகுசு கார்கள் எதுவும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தாருக்கு சொந்தமானது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Porsches, McLarens, BMWs, Jaguars, Audis among 41 super-expensive cars seized from Ambani-owned Jio World Drive Mall.Ferraris, Lamborghinis, Porsches, high-end luxury cars, Mumbai police, luxury car rally, Ambani family, Republic Day,