ஒருமுறை சார்ஜ் செய்தால் 600 km பயணம்! ஆடி காரின் விலை என்ன தெரியுமா?
மும்பையில் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி , Audi Q8 e-tron மற்றும் Audi Q8 e-tron sportback ஆகிய இரு கார்களை நேற்று முன்தினம் இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களில் Audi Q8 e-tron 50, Audi Q8 e-tron 55, Audi Q8 e-tron 50 sportback மற்றும் Audi Q8 e-tron 55 sportback என 4 வகைகளில் இந்த கார்கள் இந்திய சந்தைக்கு வந்துள்ளன.
114 கிலோ வோல்ட் திறன் கொண்ட 55 இ-ட்ரான் கார்களை ஒரு முறை சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
மேலும் 50 இ-ட்ரான் வகை கார்கள் ஒரே சார்ஜில் 505 கிமீ வரை பயணிக்கலாம்.
மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த புதிய ரக மின்சார சொகுசு கார்களை ஆடி நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த, சப்தம் எழுப்பாத மின்சார கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம் என்று ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் கூறியுள்ளார்.
காரின் சிறப்பம்சங்கள்
9 புதிய வண்ணங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புத்துணர்ச்சியூட்டும் ஸ்டைலிங்குடன் இந்த கார்கள் உள்ளது.
8 ஏர்-பேக்குகள், அவசர கால பாதுகாப்பு, நேரடி டயர் அழுத்த கண்காணிப்பு, அழகான டிசைன், தரமான பொறியியல் மேம்பாடு ஆகிய வசதிகள் இதில் உள்ளன.
மேலும் 26 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜிங் திறன் கொண்டபெரிய ரக லித்தியம் அயன் பேட்டரிகள், மொபைல் போனுக்கான வயர்லெஸ் சார்ஜிங், சிறந்த இன்-கிளாஸ் கிரவுண்ட் கிளியரன்ஸ், அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் ஆகிய வசதிகளும் உள்ளன.
ஆல்-வீல் டிரைவ், 3-டிப்ரீமியம் ஒலி அமைப்பு, பார்க் அசிஸ்டுடன் கூடிய 360 டிகிரி கேமராக்கள், எலெக்ட்ரிக் மொபிலிட்டி ஆகிய சிறப்பம்சங்கள் நிச்சயம் வாடிக்கையாளர்கள் மத்தியில்நல்ல வரவேற்பை பெற்றுத் தரும்.
அத்துடன் 8 வருடம் அல்லது ஒருலட்சத்து 60 ஆயிரம் கிமீ வரையிலான பேட்டரி உத்தரவாதம், ஆண்டு இறுதி வரை இலவச சார்ஜிங் இணைப்பு, அதிக குதிரைத்திறன் கொண்ட மின்மோட்டார்கள், எல்இடி விளக்குகள், நாடு முழுவதும் ஆயிரம் சார்ஜிங் பாயிண்ட் ஆப்ரேட்டர்கள் என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |