Audi Q7 Facelift முன்பதிவுகள் தொடக்கம்., நவம்பர் 28 இந்திய சந்தையில் அறிமுகம்
Audi India நிறுவனம் தனது வரவிருக்கும் சொகுசு எஸ்யூவி காரான Audi Q7-ன் Facelift மொடலுக்கான முன்பதிவுகளை நவம்பர் 14 முதல் தொடங்கியுள்ளது.
ஆடி இந்தியாவின் இணையதளம் அல்லது 'myAudi connect' app மூலம் ரூ.2 லட்சம் டோக்கன் பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
2024 Audi Q7-இன் வெளிப்புறம் மற்றும் உட்புறம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது தற்போதைய மொடலில் இருந்து 3.0-litre V6 TFSI பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது.
இந்த சொகுசு எஸ்யூவியில் panoramic sunroof, 4 zone automatic climate control மற்றும் ADAS போன்ற அம்சங்கள் கிடைக்கும்.
இந்த கார் நவம்பர் 28-ஆம் திகதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். இது காரின் இரண்டாவது ஃபேஸ்லிஃப்ட் மாடலாக இருக்கும்.
இது உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்டு அவுரங்காபாத் ஆலையில் விற்கப்படும். இது Mercedes-Benz GLE, Volvo XC90 மற்றும் BMW X5 போன்ற சொகுசு SUVகளுக்கு எதிராக போட்டியிடும்.
இந்த கார் Sakhir Gold, Waitomo Blue, Mythos Black, Samurai Grey மற்றும் Glacier White ஆகிய 5 வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Audi India, 2024 Audi Q7, Audi Q7 Facelift