ஜேர்மனியில் 7,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Audi
பிரபல சொகுசு கார் நிறுவனமான Audi, 2029-க்குள் ஜேர்மனியில் 7,500 பணியாளர்களை நீக்க திட்டமிட்டுள்ளது.
Volkswagen AG குழுமத்தின் கீழ் செயல்படும் Audi, செலவைக் குறைக்கும் முயற்சியில் நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு துறையில் இந்த வேலை வாய்ப்புகளை குறைக்க உள்ளது.
இது நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 1 பில்லியன் யூரோ செலவுகளை மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்சாலை பணியாளர்கள் இந்த பணிநீக்கத்தால் பாதிக்கப்படமாட்டார்கள். இருப்பினும், Audiயின் ஜேர்மனியில் உள்ள மொத்த பணியாளர்களில் 14% பேர் இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட உள்ளனர்.
அதே நேரத்தில், நிறுவனம் Ingolstadt மற்றும் Neckarsulm தொழிற்சாலைகளில் மின்சார வாகனங்கள் (EVs) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) முன்னேற்றத்திற்காக 8 பில்லியன் யூரோ முதலீடு செய்ய உள்ளது.
Audi உலகளவில் 88,000 பேர் பணியாற்றும் நிறுவனமாகும். EV விற்பனை 8% சரிவு கண்டதால், 3,000 ஊழியர்கள் பணியாற்றிய பெல்ஜிய தொழிற்சாலையை மூடியது. சீனாவில் மட்டும் 11% விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த முடிவு, ஜேர்மனியின் கார் தொழில் எதிர்கொள்ளும் மின்சார வாகன மாற்றம், கடுமையான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச போட்டி போன்ற சவால்களை வெளிப்படுத்துகிறது.
Volkswagen ஏற்கனவே 2030-க்குள் 35,000 வேலைகளை குறைக்கும் திட்டம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |