பணக்குவியலில் பாடகரை மூழ்க வைத்த பார்வையாளர்கள்
குஜராத்தில் பாடகர் மீது பார்வையாளர்கள் பணமழை பொழிந்துள்ளனர்.
பணக்குவியலில் மூழ்கிய பாடகர்
குஜராத்தில் உள்ள ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜன் தயிரோ என்ற மதநிகழ்வு ஒன்றில் நாட்டுப்புறப் பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ்(jignesh kaviraj) பாட்டு பாடிக்கொண்டிருந்தார்.

அவர் மேடையில் சம்மணமிட்டு அமர்ந்து பாடிக்கொண்டிருந்த போது, முதலில் பார்வையாளர்கள் சிறிய தொகையினை அவர் அருகே வைத்து விட்டு சென்றனர். நேரம் ஆக ஆக காணிக்கைகளின் அளவு அதிகரித்தது.
அதைத்தொடர்ந்து பண மூட்டைகளை மேடைக்கு கொண்டு வந்து அவர் மீது பணத்தை கொட்டி பணத்தால் மூழ்கடித்தனர்.
அவர் மீது பணத்தை கொட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Watch | Same with another artist (Mayabhai Ahir) in same function https://t.co/plxTRB2Pmj pic.twitter.com/NPtGV3jAdv
— DeshGujarat (@DeshGujarat) May 15, 2026
இந்த பணமானது அகமதாபாத்தில் பெண்கள் விடுதி மற்றும் கல்வி வளாகத்தைக் கட்டுவதற்காக அஹிர் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது வழக்கமாக சௌராஷ்டிரா பகுதியில், நடைபெறும் பிரபலமான கலாச்சார மற்றும் பக்தி பாரம்பரியமாகும். இதில், பணத்தை வாரி இறைப்பார்கள் எனவும், அந்த பணம் சமூக நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |