நவகிரகங்களில் ஏற்பட போகும் விபரீத மாற்றம்! ஆகஸ்ட் மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகுது?

astrology
By Kishanthini Jul 31, 2021 01:37 PM GMT
Report

ஆகஸ்ட் மாதம் நவகிரகங்களில் சில மாற்றங்கள் ஏற்படப்போகிறது. சூரியன் தனது வீடான சிம்ம ராசியில் மாத பிற்பகுதியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.

புதனும் சிம்ம ராசியில் இணைந்து பயணம் செய்தாலும் மாத பிற்பகுதியில் கன்னி ராசியில் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்யப்போகிறார். 

அந்தவகையில் தற்போது 12 ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் என்பதை பார்ப்போம்.

​மேஷம்

மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்கக்கூடியதாகவும், அதனால் உடல் மற்றும் மனம் களைப்பு ஏற்படும். நீங்கள் சொந்தமாக வியாபாரம், தொழில் செய்பவராக இருந்தால், அதில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் இல்லாமல் சுமாரான லாபம் கிடைக்கும். 

வேலைக்கு செல்பவர்களுக்கு அவர்களின் திறமைக்கேற்ப பதவி, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.  

குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் எதிர்பார்க்கலாம். உங்கள் வாழ்க்கை துணையுடனான அன்பும், அந்நியோன்யம் அதிகரிக்கும். மாணவர்கள் சற்று கவனமாக படித்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம். பெண்களுக்கு முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும்.

சந்திராஷ்டம நாட்கள் 15, 16, 17

​ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இந்த மாதம் உங்களுக்கு பல வகையில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். திருமண வயதில் இருக்கும் இளைஞர்கள் முயற்சித்தால் திருமணம் சுப நிகழ்வு கைகூடி வரும். உடல் ஆரோக்கியம் சிறு, சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், ஆரோக்கியம் சீராக இருக்கும்.

திருமண தம்பதியருக்கு அவர்களின் உறவில் அன்பும், அரவணைப்பு அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிப்பதோடு, கோயில் மற்றும் மற்ற தர்ம காரியாங்களுக்கு அதிகம் செலவு செய்வீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வேலைகள் எளிதாக முடியும் என்பதால், அந்த நேரத்தை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிடுங்கள்.

துணையுடன் மனம் விட்டு பேசுவதால் மன பாரம் குறைவதோடு, புதிய சிந்தனைகள் பிறக்கும்.

சந்திராஷ்டம நாட்கள் - 17, 18, 19

​மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இந்த மாதம் கலவையான பலன்கள் தரக்கூடியதாக இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் சொல், செயலில் கவனமாக இருப்பது அவசியம்.பேச்சில் நிதானமும், பணிவும் தேவை. எந்த ஒரு வாக்குறுதியையும் தர வேண்டாம். குடும்பத்திலும், பணியிடத்திலும் எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

உங்கள் தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் இருக்கும். பணியிடத்தில் விட்டுக் கொடுத்து செல்வதும், புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதும் நல்லது. நீங்கள் கவனக்குறைவாக செய்யும் எந்த ஒரு செயலும் பின்னர் உங்களுக்கு ஆபத்தாக முடியும். உத்தியோகத்தில் சுமாரான பலன்களே கிடைக்கும்.

தேவையற்ற மன பதற்றம் ஏற்படும் என்பதால், முடிந்த வரை அமைதியாக இருக்கவும். யோகா, தியானம் செய்வதோடு, கோயிலுக்கு சென்று வழிபட்டு வரவும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும், உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள் - 19, 20, 21, 22

கடகம்

கடக ராசி நேயர்களே உங்களுக்கு பல நற்பலன்களை அடைந்தாலும், சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். உங்கள் குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும். அதே போல உங்கள் துணையுடனான ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அதே சமயம் உங்கள் வேலையில் நீங்கள் அதிகளவில் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த மாதம் பண வரவு சிறப்பாக இருந்தாலும், அதிக செலவை கட்டுப்படுத்திச் சேமிக்க முயலவும்.

உத்தியோகத்தில் சிலருக்கு பணி இட மாற்றங்கள் ஏற்படலாம். சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். இருப்பினும் பொறுமையாக சூழலைக் கையாள்வதும், விடா முயற்சி செய்து உங்கள் இலக்கை அடைய முயலவும். உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்துங்கள். தொழில், வியாபாரத்தில் பொறுமையும், கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். உங்களின் செயல்களுக்கு உடனடியாக பலன் கிடைக்காமல் தாமதமாகலாம்.

சந்திராஷ்டம நாட்கள் - 22, 23, 24

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே சிறப்பானதாகவே இருக்கும். மாத நடுவில் உங்கள் ராசியில் ராசி நாதன் சூரியன் உங்கள் ராசியில் சஞ்சரிக்க உள்ளார். அதனால் உங்களின் ஆளுமை, அதிகாரம் மேலும் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருப்பதோடு, கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு இருக்காது.

உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். உங்களின் ஆரோக்கியம் மேம்படும். இளம் வயது சிம்ம ராசியினர் காதலில் விழ வாய்ப்புள்ளது. திருமணமான தம்பதியினரிடையே அந்நியோன்யம் சிறப்பாக இருக்கும். கருத்து வேறுபாடு நீங்கும்.

பணியிடத்தில் உங்களுக்கான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவர். புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க, விரிவுபடுத்த வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எதிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உணவு விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள்: 24, 25, 26

கன்னி

கன்னி ராசி அன்பர்களுக்கு முன்னேற்றமும், நற்பலனும் கிடைக்கக்கூடிய நல்ல மாதமாக அமையும். திருமணமான தம்பதியிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி இனிமையும், மன நிம்மதியும் பெறுவீர்கள். குடும்பத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய திட்டங்களுடன் சிறப்பாக செயல்படுவீர்கள்.

பணம் சேர்ப்பது தொடர்பாக நிறைய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கடனை திருப்பி செலுத்தவும் வாய்ப்புள்ளது. வேலை தேடும் இளைஞர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய திட்டங்களால் லாபம் கிடைக்கும். வருமானம் சீராக இடையூறு இல்லாமல் இருக்கும். ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும். சிலருக்கு உடல் வலி, மூட்டு வலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

சந்திராஷ்டம நாட்கள்:1, 26, 27 

துலாம்

துலாம் ராசி நேயர்களே உங்கள் வீட்டில் சுப காரிய நிகழ்வுகள் சிறப்பாக நடக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வரன் அமைய வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.

நினைத்த பலன் கிடைப்பது சிரமம். பணியிடத்தில் கவனமாக செயல்படுவதோடு, சக ஊழியர்களுடன் நட்புணர்வுடன் பழகவும். தொழில் செய்பவர்கள் மன திருப்தி இருக்காது. பணம் வர தடைப்படும். மொத்தத்தில் நிதி நிலைமை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். செலவுகளை சுருக்குவது அவசியம்.

குடும்ப உறவு சுமூகமாக இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். தொழிலில் லாபத்திற்காக குறுக்குவழியை யோசிக்க வேண்டாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும், உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும், முறையான ஓய்வும் எடுத்துக்கொள்வதும் அவசியம். 

சந்திராஷ்டம நாட்கள்: 1, 2, 3, 28, 29, 30 

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்கள் கலவையான பலனை இந்த மாதத்தில் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் நெருக்கடியான மற்றும் சவாலான தருணங்களை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக ஏற்ற தாழ்வு இருந்தாலும், நஷ்டம் எதுவும் இருக்காது. மேலதிகாரிகளிடம் விவாதம் செய்வதை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

உத்தியோகமாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் உங்களின் கடின உழைப்பு ஏற்ற பலனைப் பெற காலதாமதம் ஆகும். உடனே அதன் பலன் தெரியாது.  

குடும்ப உறுப்பினர்களுடன் எந்த ஒரு கருத்து மோதல்கள் வேண்டாம். துணையுடன் அன்பாக அனுசரித்து செல்வது நல்லது. சில வீண் அலைச்சல்கள் ஏற்படுவதால் உடல் அசதி ஏற்படும்.

இருப்பினும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்பதால் எந்த செயலையும் சிறப்பாக செய்வீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 4, 5, 31 

தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சற்று சவாலானதாக இருக்கும். குடும்ப அமைதியின்மை இருப்பதால், உங்களால் குடும்பம், உத்தியோகத்தைக் கவனிக்க முடியாமல் சிரமப்படுவீர்கள்.

உத்தியோகத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் பணியிடத்தில் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் தேவையற்ற பிரச்னை, சண்டை ஏற்படலாம்.

அரசுத்துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பான பலனை அடைவீர்கள். இளம் வயது தனுசு ராசியினர் காதல் வலையில் சிக்க நேரிடும். காதல் அனுபவம் இனிமையாக இருக்கும்.

வருமானத்தை அதிகரிக்க நீங்கள் எடுக்கும் நடவடிக்கை, முயற்சிகள் புதிய திட்டங்கள் நல்ல பலனைத் தரும். எதிர்பார்த்த உத்ஹிய உயர்வு, பணி உயர்வு கிடைக்கும். இந்த மாதம் பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் உடல் சோர்வு ஏற்படும். சிலருக்கு கால், முதுகு வலி போன்ற உடல் பிரச்னைகள் ஏற்படலாம்.

சந்திராஷ்டம நாட்கள் : 6,7

மகரம்

மகர ராசி அன்பர்ளுக்கு கவனமாக செயல்படுவதோடு, எந்த ஒரு விஷயத்திலும் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உங்கள் வருமானம் உயர நல்ல வாய்ப்பு இருக்கும் என்றாலும் பணம் கையில் தங்காமல் செலவு ஏற்படும் சூழல்கள் வரும் என்பதால் சேமிப்பதற்கு முழு முயற்சியையும் எடுங்கள்.  

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் ஏற்படும் பிரச்னை மற்றும் உத்தியோக உத்தரவாதமின்மையால் அதிகம் கவலைப் படுவீர்கள்.இருப்பினும் சரியான திட்டமிடல், கடின உழைப்பு ஆகியவை உங்களுக்கு சிறப்பான நம்பிக்கையைத் தரும்.

உங்களுக்கு பூர்விக சொத்து சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேலை தேடக்கூடிய நபர்களுக்கு விரும்பிய வகையில் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வேலை திருப்தி தரக்கூடியதாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

சந்திராஷ்டம நாட்கள் : 8,9, 10  

கும்பம்

கும்ப ராசியை சேர்ந்தவர்களுகு பல வகையில் அனுகூலமான பலனைப் பெறக்கூடிய மாதமாக இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களுடனான் உறவில் சுமுகம் இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சிறந்த பலன் கிடைக்க பொறுமையும், கவனமும் தேவை. வருமானம் சிறப்பாக இருந்தாலும், புதிய முதலீடு செய்வதில் கவனம் தேவை.

குடும்ப உறவில் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் சிறப்பாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும்/ இருப்பினும் உங்களின் தேவைகள் அதிகமாக இருக்கும்.

தொண்டை, கழுத்து சார்ந்த உடல் பிரச்னைகள் ஏற்படலாம். சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளவும். உடல் நலனில் அக்கறை தேவை.

சந்திராஷ்டம நாட்கள் : 11, 12 

மீனம்

மீன ராசியினர் பல வகையில் நற்ப்லன் பெறக்கூடிய மாதமாக இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு, சிறு பிரச்னைகள் இருந்தாலும், அன்பு நீடிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும். உங்களின் கடின உழைப்பு, பணிச்சுமையைச் சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.

நண்பர்கள், உறவினர்கள் சிறப்பான ஆதரவு இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும், பணம் கடனாக கொடுப்பது வேண்டவே வேண்டாம். கொடுத்தால் திரும்ப வராது. கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

முதலீடுகள் செய்வதையும் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் பெரியளவில் பிரச்னை இருக்காது. மன அமைதியுடன், பொறுமையை காக்கவும்.

சந்திராஷ்டம நாட்கள் : 13, 14  

நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US