அமெரிக்கா-பிரித்தானியா-அவுஸ்திரேலியா இணைந்து உருவாக்கும் underwater ட்ரோன்
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து, நீருக்கடியில் இயங்கும் ட்ரோன் (Uncrewed Undersea Vehicle - UUV) தொழில்நுட்பத்தை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளன.
இந்த திட்டம், கடலுக்கு அடியில் கேபிள்கள் மற்றும் குழாய்களை பாதுகாக்கவும், பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தவும் உதவும்.
சிங்கப்பூரில் நடைபெற்ற Shangri-La Dialogue பாதுகாப்பு மாநாட்டில், மூன்று நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் John Healey, தனது நாடு 150 மில்லியன் பவுண்டு முதலீடு செய்யும் என தெரிவித்தார்.

AUKUS பாதுகாப்பு உடன்படிக்கை 2021-இல் தொடங்கப்பட்டது. முதலில் அணுசக்தி மூலம் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கும் திட்டம் இருந்தது. இப்போது “Pillar Two” எனப்படும் பிரிவின் கீழ், நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், underwater ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற மேம்பட்ட திறன்களில் கூட்டாக பணியாற்றுகின்றனர்.
இந்த புதிய UUV திட்டம், ஆழ்கடலில் கேபிள்கள் மற்றும் குழாய்களை பாதுகாப்பதோடு, கண்காணிப்பு, தாக்குதல் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளிலும் பயன்படும். இது பசிபிக், அட்லாண்டிக் மற்றும் வடக்கு கடல்பகுதிகளில் தடுப்பு சக்தியை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
சமீபத்தில், ரஷ்யா மற்றும் சீனக் கப்பல்கள் கடலுக்கு அடியில் கேபிள்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், இந்த புதிய திட்டம், மேற்கத்திய நாடுகளின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |