AUKUS ஒப்பந்தத்தை விமர்சித்த சீனா: பதிலடிக் கொடுத்த ஜோ பைடன்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீனாவிற்கு ஐந்து வார்த்தை பற்றிய செய்தியில் அணு ஆயுதங்களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கு ஐந்து வார்த்தைகள்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீனாவிற்கு அனுப்பிய ஐந்து வார்த்தைகள் கொண்ட செய்தியில் AUKUS என்பது அவுஸ்திரேலியாவிடமிருந்து அணு ஆயுதங்களைப் பெறுவது பற்றியதல்ல, இதனால் சீனா அச்சப்பட வேண்டியதில்லை என வலியுறுத்தியுள்ளார்.
@AP Photo/Evan Vucc
2033 ஆம் ஆண்டிற்குள் அவுஸ்திரேலியா 368 பில்லியன் டொலர்கள் வரை செலவழித்து, வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த பாதுகாப்புத் திட்டத்தின் கீழ். எட்டு அணு உந்து நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்ட புதிய கடற்படையை அடிலெய்டில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
@AP
சீனாவுடன் அமெரிக்கா உருவாக்கியுள்ள ஒப்பந்தத்தை மீறுவதாகச் சீனா தரப்பு கூறியிருந்தது. மேலும் நீர் மூழ்கிக் கப்பல்கள் அணுசக்தியை உருவாக்கும், அணு ஆயுதங்கள் அல்ல” என்று பைடன் வலியுறுத்தியுள்ளார்.
படகுகளில் அணு ஆயுதங்கள் இருக்காது
சான் டியாகோவிலுள்ள நேவல் பேஸ் பாயிண்ட் லோமாவில் நடந்த விழாவில் பேசிய ஜோ பைடன் “ இந்த படகுகளில் எந்தவிதமான அணு ஆயுதங்களும் இருக்காது” எனக் கூறியுள்ளார்.
அவ்விழாவில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். AUKUS உடன்படிக்கையைச் சீனா விமர்சித்துள்ளது, இது வளர்ந்து வரும் ஆசிய வல்லரசைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையிலான முயற்சியாகச் சித்தரிக்கிறது.
@nine
பாரிய எஃகு சுவர் சீனாவின் தலைவர் ஜி ஜின்பிங், மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது பேசிய உரையில், தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், இராணுவத்தை ஒரு "பாரிய எஃகு சுவராக" உருவாக்குவதாகவும் கூறியிருந்தார்.
தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைத் திறம்படப் பாதுகாக்கும் எஃகு சுவராக மக்கள் விடுதலை இராணுவத்தை (நாம்) கட்டமைக்க வேண்டும்," என்று ஜி ஜின்பிங் தேசிய மக்கள் காங்கிரஸில் (NPC) மாநாட்டில் கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.