163 ஓட்டங்களுக்கு சுருண்ட அவுஸ்திரேலியா: பாகிஸ்தான் அபார வெற்றி! 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹரிஸ் ரவூப்!
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
163 ஓட்டங்களுக்கு சுருண்ட அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து களமிறங்கியது.
Shaheen Shah becomes a Lethal Weapons when he plays on Australian Soil 👏🏻
— Richard Kettleborough (@RichKettle07) November 8, 2024
Shaheen Shah + Haris Rauf = Beast Mode in Australia 💥#PAKvAUS #AUSvsPAKpic.twitter.com/Tn9PDcIiHI
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பம் முதலே தடுமாறிய அவுஸ்திரேலிய அணி 35 ஓவர்கள் முடிவிலேயே 163 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 35 ஓட்டங்கள் குவித்தார்.
மிரட்டிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஹரிஸ் ரவூப் 5 விக்கெட்டுகளை பறித்து மிரட்டினார்.
HARIS RAUF GETS A FIFER!!
— Kh4N_02 (@kh4n_02) November 8, 2024
SECOND TIME HE TAKES A FIFER FOR PAKISTAN, FANTASTIC SPELLS THESE 2 MATCHES.
VERY WELL DESERVED 👏🔥#AUSvsPAK #PAKvsAUS #AUSvPAK #PAKvAUS #PCB #PakistanCricketpic.twitter.com/aLP920GaYN
மற்றொரு புறம் அவுஸ்திரேலிய வீரர்களை திணறடித்த ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நசீம் ஷா மற்றும் ஹஸ்னைன் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான்
164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய சைம் அயூப் 82 ஓட்டங்களும், அப்துல்லா ஷபீக் 64 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.
இதன் மூலம் 26.3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 169 ஓட்டங்கள் குவித்து பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |