பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர்: அவுஸ்திரேலிய ஊடகத்திற்கு A$150,000 அபராதம்
ஊழியரை நியாயமற்ற முறையில் பணி நீக்கம் செய்ததற்காக அவுஸ்திரேலிய பொது ஒளிபரப்பு ஊடகத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
வானொலி தொகுப்பாளரை நியாமற்ற முறையில் பணி நீக்கம் செய்த அவுஸ்திரேலியாவின் தேசிய ஒளிபரப்பு ஊடகமான அவுஸ்திரேலியன் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்(ABC) நிறுவனத்திற்கு அந்நாட்டு நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
அன்டோனெட் லத்தூஃப் என்ற பெண் வானொலி தொகுப்பாளர் 2023ம் ஆண்டு டிசம்பரில் காசா போர் குறித்து அவரது சமூக ஊடக பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இதை எதிர்த்து அன்டோனெட் லத்தூஃப் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் பெடரல் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனமான ABC-க்கு சுமார் A$150,000 அபராதம் விதித்துள்ளது.
அன்டோனெட் லத்தூஃபுக்கு ஏற்கனவே A$70,000 இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், இந்த அபராதம் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது.
ஊடக நிறுவனமான ABC தனது செயலின் தீவிரத் தன்மையை உணர்ந்து கொள்ள இந்த கூடுதல் அபராதம் அவசியம் என்று வழக்கை விசாரித்த நீதிபதி டாரில் ரங்கையா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |