இலங்கையின் கையில் அவுஸ்திரேலியாவின் உலகக்கோப்பை கனவு!
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
ரஷித் கான் 48 (23) ஓட்டங்கள் எடுத்ததுடன், ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்
அவுஸ்திரேலிய அணி மைனஸ் ரன்ரேட்டை கொண்டுள்ளதால் அரையிறுதியில் நுழைய இலங்கை அணியை நம்பியுள்ளது.
அடிலெய்டில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 54 ஓட்டங்களும், மிட்செல் மார்ஷ் 45 ஓட்டங்களும் எடுத்தனர்.
Australia have lost three wickets while scoring 54 runs in the Powerplay 🏏#AUSvAFG | #T20WorldCup | 📝: https://t.co/p7lkYsEkcs pic.twitter.com/pdG447bk4K
— ICC (@ICC) November 4, 2022
பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. ரஷித் கான் 48 ஓட்டங்கள் விளாசினார். இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தனது பிரிவில் பிடித்துள்ளது.
For a blistering 32-ball 54* in a must-win game against Afghanistan, Glenn Maxwell is the @aramco POTM 🔥 pic.twitter.com/JZ8tSbSgjw
— ICC (@ICC) November 4, 2022
ஆனால், ரன்ரேட் மைனஸில் உள்ளதால் அவுஸ்திரேலியா நாளை நடக்கும் இங்கிலாந்து - இலங்கை போட்டியை நம்பியுள்ளது. அதாவது, நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இரண்டாவதாக தகுதி பெறும் அணி எது என்பதில் அவுஸ்திரேலியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இங்கிலாந்து அணி +0.547 ரன்ரேட்டையும் (5 புள்ளிகளுடன்), அவுஸ்திரேலியா -0.173 ரன்ரேட்டையும் வைத்துள்ளன. இதனால் நாளைய போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் இரண்டாவது அணியாக நுழையும்.
எனவே, இலங்கை அணி வெற்றி பெற்றால் மட்டுமே அவுஸ்திரேலிய அணி உலகக்கோப்பை கனவை எட்ட வாய்ப்புள்ளது.
Afghanistan need 22 runs from the last over!
— ICC (@ICC) November 4, 2022
Can they do it?#AUSvAFG | #T20WorldCup | 📝: https://t.co/p7lkYsEkcs pic.twitter.com/M1xccY6kAG
A brilliant fight from Afghanistan, but Australia come out on top in Adelaide 💪#AUSvAFG | #T20WorldCup | 📝: https://t.co/p7lkYsEkcs pic.twitter.com/3jppExEaL1
— ICC (@ICC) November 4, 2022