68-க்கு ஆல் அவுட்... 3வது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து படுதோல்வி! கோப்பையை தக்கவைத்தது அவுஸ்திரேலியா
மெல்போர்னில் நடந்த 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அபார வெற்றிப்பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
2 போட்டிகள் முடிவில் இரண்டிலும் அவுஸ்திரேலிய வெற்றிப்பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் இருந்த நிலையில், டிசம்பர் 26 மெல்போர்னில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் தொடங்கியது.
டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 185 ரன்களுக்கு சுருண்டது.
இதைதொடர்ந்து முதலில் இன்னிங்ஸில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 2வது நாள் தொடர்ந்து பேட்டிங் செய்து 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
2வது இன்னிங்ஸை் தொடங்கிய இங்கிலாந்து அணி, 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 3வது ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியடைந்தது.
#Ashes retained ✅ pic.twitter.com/qhlKD69ciV
— Cricket Australia (@CricketAus) December 28, 2021
மெல்போர்ன் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்களில் அபார வெற்றிப்றெற அவுஸ்திரேலிய அணி, 3-0 என 2021 ஆஷஸ் தொடரையும் கைப்பற்றி கோப்பை தக்கவைத்துள்ளது.
இந்த தொடருடன் இதுவரை நடந்துள்ள 72 ஆஷஸ் தொடர்களில் ஆஸ்திரேலியா 34 தொடர்களை, இங்கிலாந்து 32 தொடர்களை வென்றுள்ளன, 6 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளன.