கடைசி வரை போராடிய அஸ்வின், ஜடேஜா..இந்திய அணி படுதோல்வி..பதிலடி கொடுத்த அவுஸ்திரேலியா
இந்தூர் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்தூர் டெஸ்ட்
இந்திய கிரிக்கெட் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்தூரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி 1ஆம் திகதி தொடங்கியது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 109 ஓட்டங்களும், அவுஸ்திரேலிய அணி 197 ஓட்டங்களும் எடுத்தன. அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்சை ஆடிய இந்திய அணி 163 ஓட்டங்களில் சுருண்டது.
அதிகபட்சமாக புஜாரா 59 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் நாதன் லயன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Stumps on Day 2⃣ of the third #INDvAUS Test.@cheteshwar1 top-scores for #TeamIndia ?? with a magnificent 59 (142) ????
— BCCI (@BCCI) March 2, 2023
We will be back with Day three action tomorrow as Australia need 76 runs in the final innings.
Scorecard - https://t.co/t0IGbs2qyj @mastercardindia pic.twitter.com/m0xdph0GeA
எளிய இலக்கு
இந்திய அணி குறைந்த ஸ்கோரில் சுருண்டதால் அவுஸ்திரேலிய அணிக்கு 76 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி மூன்றாவது நாளான இன்று களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்து 78 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் 49 ஓட்டங்களும், மார்ன்ஸ் லாபுசாக்னே 28 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த இன்னிங்சில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் மாறி மாறி ஓவர்களை வீசி விக்கெட்டை வீழ்த்த போராடினர். ஆனால் முதல் ஓவரில் விக்கெட்டை எடுத்த அஷ்வினால் அதன் பின்னர் மேலும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. எனினும் அவர் 3 ஓவர்களை மெய்டன் செய்தார்.
Just the start #TeamIndia needed. @ashwinravi99 strikes ?
— BCCI (@BCCI) March 3, 2023
Usman Khawaja goes for a duck.
Live - https://t.co/t0IGbs2qyj #INDvAUS @mastercardindia pic.twitter.com/QO8Xo40JNr
சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வந்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது.
மேலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியை மூன்றே நாட்களில் இந்தியா முடித்தற்கு அவுஸ்திரேலியா தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
Australian wins the third test in Indore by 9 wickets!#INDvAUS
— cricket.com.au (@cricketcomau) March 3, 2023
Australia have confirmed their place in the WTC final!#INDvAUS pic.twitter.com/kGWQmTo2GT
— cricket.com.au (@cricketcomau) March 3, 2023