இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியனான அவுஸ்திரேலியா! கம்மின்ஸ் படை வரலாற்று சாதனை
உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா சாம்பியன் ஆனது.
உலகக்கோப்பை டெஸ்ட்
லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 445 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 4வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, கடைசி நாளான இன்று இந்திய அணி தனது ஆட்டத்தை தொடர்ந்தது. அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் போலன்ட் ஒரே ஓவரில் இந்திய அணிக்கு செக் வைத்தார்.
Twitter
அவரது ஓவரில் விராட் கோலி 49 ஓட்டங்களில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜா தனது 2வது பந்திலேயே அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
நாதன் லயன் மாயாஜாலம்
கோலியைத் தொடர்ந்து ஸ்டார்க் பந்துவீச்சில் அஜிங்கிய ரஹானே 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி ஏறக்குறைய தோல்வியடைந்து விட்டது என பலரும் கருதினர்.
Twitter
ஆனாலும் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் நம்பிக்கை அளிக்கும் வகையில் பொறுமையுடன் ஓட்டங்கள் சேர்த்தார். எனினும் நாதன் லயன் அவரை 23 ஓட்டங்களில் வெளியேற்றினார்.
Twitter
அதன் பின்னர் கடைசி விக்கெட்டாக லயன் ஓவரில் சிராஜ் ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
Twitter
இந்த வெற்றியின் மூலம் ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை அவுஸ்திரேலியா படைத்துள்ளது.
Twitter