அவுஸ்திரேலியாவுக்கு தரமான பதிலடி! அலறவிட்ட ஒற்றை வீரர்..விழிபிதுங்கிய பந்துவீச்சாளர்கள்
அயர்லாந்து வீரர் டக்கருக்கு இது 5வது டி20 அரைசதம் ஆகும்
இந்தப் போட்டியில் நான்கு அவுஸ்திரேலிய வீரர்கள் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்
பிரிஸ்பேனில் நடந்த டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணியில் வார்னர் 3 ஓட்டங்களில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் அதிரடியாக 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் பின்ச் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருக்கு உறுதுணையாக ஸ்டோய்னிஸ் அதிரடி காட்டினார்.
இவர்களின் அபார ஆட்டத்தினால் அவுஸ்திரேலியா 179 ஓட்டங்கள் குவித்தது. பின்ச் 63 ஓட்டங்களும், ஸ்டோய்னிஸ் 35 ஓட்டங்களும் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் மெக்கர்தி 3 விக்கெட்டுகளையும், ஜோஷ்வா லிட்டில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Finch is Player of the Match #T20WorldCup https://t.co/2myAfnt21G
— cricket.com.au (@cricketcomau) October 31, 2022
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கர் அதிரடியில் மிரட்டினார்.
தனது மிரட்டலான ஆட்டத்தினால் அவுஸ்திரேலியாவுக்கு தலைவலி கொடுத்த டக்கர் அரைசதம் விளாசினார். ஆனால் அவருக்கு உறுதுணையாக எந்த வீரரும் நின்று ஆடவில்லை.
A tough start, but Lorcan Tucker is fighting back ?
— Cricket Ireland (@cricketireland) October 31, 2022
We're 49-5 at the end of the powerplay.#AUSvIRE #T20WorldCup #BackingGreen ☘️? pic.twitter.com/6jSFTaPtlC
இதனால் அயர்லாந்து அணி 18.1 ஓவரில் 137 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இறுதிவரை களத்தில் இருந்த டக்கர் 48 பந்துகளில் 71 ஓட்டங்கள் விளாசினார். இதில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும்.
Lorcan Tucker brings up 50 with a six ?
— Cricket Ireland (@cricketireland) October 31, 2022
A top innings in tricky circumstances.#AUSvIRE #T20WorldCup #BackingGreen ☘️? pic.twitter.com/SskxcSbhZp
அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் கம்மின்ஸ், ஸ்டார்க், மேக்ஸ்வெல் மற்றும் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளையும், ஸ்டோய்னிஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா இரண்டு வெற்றிகளுடன் தனது குழுவில் 2வது இடத்தை பிடித்துள்ளது.
Australia complete a fine win to keep semi-final hopes alive ?#T20WorldCup | #AUSvIRE | ?: https://t.co/CW4eQlDZGZ pic.twitter.com/WdUP4gLfZE
— ICC (@ICC) October 31, 2022