டி20 உலகக்கிண்ண பயிற்சி போட்டியிலேயே சூறாவளியாட்டம் ஆடிய அவுஸ்திரேலியா! துவம்சமான நமீபியா
நமீபியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
டி20 உலகக்கிண்ண தொடர் தொடங்க உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் பயிற்சி ஆட்டங்களில் விளையாட தொடங்கியுள்ளன.
டிரினிடாட்டில் நடந்த போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய நமீபியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஸனே கிரீன் மட்டும் நின்று ஆட, ஏனைய வீரர்கள் அவுஸ்திரேலிய பந்துவீச்சில் தடுமாறினர். இதனால் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
கிரீன் 30 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் எடுத்தார். ஆடம் ஜம்பா 3 விக்கெட்டுகளும், ஜேசல்வுட் 2 விக்கெட்டுகளும், எல்லிஸ் மற்றும் டிம் டேவிட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் 14 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 18 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த இங்கிலிஷ் 5 ஓட்டங்களிலும், டிம் டேவிட் 23 (16) ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் ருத்ர தாண்டவம் ஆடிய டேவிட் வார்னர், ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் அவுஸ்திரேலியா 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பு 123 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Australia cruise past Namibia in their opening #T20WorldCup warm-up fixture with David Warner top-scoring with 54no.
— cricket.com.au (@cricketcomau) May 29, 2024
Full scorecard: https://t.co/b9E8SkBe1d pic.twitter.com/FQIaAhnTFO
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |