பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அவுஸ்திரேலியா! U19யில் இந்தியாவுடன் மோதல்
U19 உலகக்கோப்பை அரையிறுதியில் அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
இரண்டாவது அரையிறுதி
Willowmoore Park மைதானத்தில் நடந்த U19 உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 179 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
@TheRealPCB
அதிகபட்சமாக அராபத் மின்ஹாஸ் 52 (61) ஓட்டங்களும், அஸன் அவைய்ஸ் 52 (91) ஓட்டங்களும் எடுத்தனர். அவுஸ்திரேலியாவின் டாம் ஸ்ட்ராக்கர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
@TheRealPCB
அவுஸ்திரேலிய அணி வெற்றி
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி 49.1 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
@ICC
ஹாரி டிக்ஷன் 50 (75) ஓட்டங்களும், ஒலிவர் பேக்கே 49 (75) ஓட்டங்களும் எடுத்தனர். இதே மைதானத்தில் வரும் 11ஆம் திகதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இந்தியாவுடன் மோத உள்ளது.
@ICC
@ICC
@ICC
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |