அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி! இலங்கை அணி மோசமான தோல்வி
கொழும்பில் நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் படுதோல்வியடைந்தது.
இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கொழும்பில் நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி நல்ல தொடக்கம் அமைத்தது. அதிரடி காட்டிய குணாதிலகா 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அசலங்கா சிறப்பாக ஆடினார்.
Photo Credit: AFP/Getty Images
Photo Credit: AFP/Getty Images
நிசாங்கா-அசலங்காவின் ஆட்டத்தினால் இலங்கை 12வது ஓவரிலேயே 100 ஓட்டங்களை எட்டியது. அதன்பின்னர் இலங்கை அணி சரிவை சந்தித்தது. ஹேசல்வுட் மற்றும் ஸ்டார்க் ஆகியோரின் மிரட்டல் பந்துவீச்சில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிந்தது.
Photo Credit: AFP/Getty Images
நிசங்கா 36 ஓட்டங்களும், அசலங்கா 38 ஓட்டங்களும் எடுத்து அவுட் ஆகினர். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் 128 ஓட்டங்களில் இலங்கை அணி சுருண்டது. அவுஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கேன் ரிச்சர்டுசன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் இலக்கை 14 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது. கேப்டன் பின்ச் 61 ஓட்டங்களும், டேவிட் வார்னர் 70 ஓட்டங்களும் எடுத்தனர். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி கொழும்பின் அதே மைதானத்தில் நடக்க உள்ளது.
Photo Credit: Twitter (©Sri Lanka cricket)
Photo Credit: AFP