ஹசரங்கா சுழலில் வீழ்ந்த விக்கெட்டுகள்.. கடைசி வரை போராடிய இலங்கை
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கொழும்பில் நடந்தது. அவுஸ்திரேலியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இலங்கை அணியை துடுப்பாட்டம் செய்ய பணித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில், தொடக்க வீரர்கள் நிசங்கா மற்றும் குணாதிலகா சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். பின்னர் கைகோர்த்த அசலங்கா-குசால் மெண்டிஸ் இணை ஸ்கொரை உயர்த்தியது. 39 ஓட்டங்கள் எடுத்திருந்த அசலங்கா, மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
Photo Credit: Buddhika Weerasinghe/Getty Images
அடுத்து குசால் மெண்டிசும் அவுட் ஆக, இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலியா அணி தரப்பில் கேன் ரிச்சர்டுசன் 4 விக்கெட்டுகளையும், ஜே ரிச்சர்டுசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் எளிய இலக்கு என நினைத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியை, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்கா நிலைகுலைய வைத்தார். அவரது அபாரமான பந்துவீச்சில் கேப்டன் பின்ச், மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
Photo Credit: ISHARA S. KODIKARA/AFP/Getty Images
ஆனால் கடைசி கட்டத்தில் மேத்யூ வேட் நிலைத்து நின்று ஆடியதால் அவுஸ்திரேலிய அணி 17.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், சமீரா மற்றும் துஷாரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Australia win the series with a match to play.
— cricket.com.au (@cricketcomau) June 8, 2022
Matthew Wade top-scored in the chase with 26* #SLvAUS
Photo Credit: AP