9 பந்துகளில் 32 ஓட்டங்கள்! வாணவேடிக்கை காட்டிய மேக்ஸ்வெல்
கேமரூன் கிரீன் சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
57 ஓட்டங்கள் விளாசிய டேவிட் வார்னருக்கு 25வது அரைசதம் ஆகும்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டவுன்ஸ்வில்லேவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 47.3 ஓவர்களில் 200 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக மாதேவரே 72 ஓட்டங்கள் விளாசினார். அவுஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் கிரீன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆடம் ஸம்பா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 66 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாசினார். ஸ்டீவ் ஸ்மித் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, அலெக்ஸ் கேரி 10 ஓட்டங்களிலும், ஸ்டோய்னிஸ் 19 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
MAXI-mum ?
— cricket.com.au (@cricketcomau) August 28, 2022
The 33-year-old is on the attack! #AUSvZIM pic.twitter.com/WRiUeSgpET
மிட்சேல் மார்ஷ் 2 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 9 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 32 ஓட்டங்கள் விளாசி களத்தில் நின்றார்.
What a way to win it!
— cricket.com.au (@cricketcomau) August 28, 2022
Glenn Maxwell was wasting no time #AUSvZIM pic.twitter.com/v2BoaKgTqc
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 33.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்டீவ் ஸ்மித் 48 ஓட்டங்கள் எடுத்தார்.