மிரட்டிய ஸ்பென்சர் ஜான்சன்! பாகிஸ்தானை வீழ்த்தி அவுஸ்திரேலிய அபார வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த அவுஸ்திரேலியா
பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா இடையிலான 2வது டி20 போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
20 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் குவித்தது.
அவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மத்தேயு ஷார்ட் 32 ஓட்டங்கள் குவித்தார்.
அவுஸ்திரேலியா அபார வெற்றி
வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தது.
அணியின் வெற்றிக்காக போராடிய உஸ்மான் கான் 52 ஓட்டங்களும், இர்பான் கான் 37 ஓட்டங்களும் குவித்தனர்.
What a save by Haris Rauf 😱, Australia's official account admit it was Haris Rauf's series, whenever team struggle he came with power pace bowling to come back as a team, he's giving everything with bowl, field & bat too🫡👏#PAKvsAUS #AUSvsPAK #AUSvPAKpic.twitter.com/PfOrKCPz0A
— World Sports (@worldsports__) November 16, 2024
இருப்பினும் 19.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்கள் மட்டுமே பாகிஸ்தான் அணி குவித்தது.
இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |