எது பலம் வாய்ந்த அணி..! முகமது கைஃப்-க்கு பதிலடி கொடுத்த டேவிட் வார்னர்
இறுதிப் போட்டி போன்ற முக்கியமான ஆட்டங்களில் சிறப்பாக விளையாடுவது தான் முக்கியம் என முகமது கைஃப்-க்கு அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பதிலடி கொடுத்துள்ளார்.
முகமது கைஃப் கருத்து
இந்தியாவில் வைத்து 13வது உலக கோப்பை போட்டி வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
இதன் இறுதிப் போட்டியில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி 6 முறையாக உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து அவுஸ்திரேலிய அணியின் வெற்றி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்து இருந்தார்.
அதில், “உலக கோப்பை வென்ற அவுஸ்திரேலியா பலம் வாய்ந்த அணி என்று ஏற்றுக் கொள்ள முடியாது, தோற்றத்தின் அடிப்படையில் இந்திய அணிதான் மிகவும் பலம் வாய்ந்தது” என தெரிவித்து இருந்தார்.
டேவிட் வார்னர் பதிலடி
இந்நிலையில், முகமது கைஃப் கருத்துக்கு அவுஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் பதிலடி கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், எந்த அணி தோற்றத்தில் பலம் வாய்ந்ததாக உள்ளது என்பது முக்கியமில்லை, இறுதிப் போட்டி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் சரியாக சிறப்பாக விளையாடுவது தான் முக்கியம்.
அந்தந்த நாட்களில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும், அதுதான் விளையாட்டு என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |