16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடக தடை: பிரித்தானியாவுக்கு இடம் பெயர்ந்த அவுஸ்திரேலிய குடும்பம்
16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்ததை அடுத்து அவுஸ்திரேலியாவில் பிரபலமான குடும்பம் ஒன்று நாட்டை விட்டு வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களுக்கு தடை
அவுஸ்திரேலியாவில் பதின்ம வயதினரை பாதுகாக்கும் வகையில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டை அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்த சமூக ஊடக தடையானது டிசம்பர் மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேறிய குடும்பம்
இந்நிலையில் அவுஸ்திரேலிய சமூக ஊடகங்களில் “எம்பயர் குடும்பம்”(Empire Family) என அறியப்படும் பிரபலமான குடும்ப உறுப்பினர்கள், அவுஸ்திரேலியாவின் சமூக ஊடக தடைக்கு பிறகு அவுஸ்ரேலியாவில் இருந்து வெளியேறி பிரித்தானியாவுக்கு இடம் பெயர இருப்பதாக அறிவித்துள்ளது.

எம்பயர் குடும்பம் என சமூக ஊடகத்தில் அறியப்படும் கணக்கில், பெக் மற்றும் பெக் லீ என்ற தாய்மார்கள் மற்றும் அவர்களுடைய 17 வயது மகன் ப்ரெஸ்லி மற்றும் 14 வயது மகள் சார்லோட் ஆகிய நான்கு பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
பிரித்தானியாவுக்கு இடம் பெயரும் இவர்களது முடிவு, தங்களது மகள் சார்லோட் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட உதவும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் தாங்கள் சமூக ஊடகங்களை நல்ல முறையில் மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        