படுமோசமான ஃபீல்டிங்! 6 கேட்ச்களை தவறவிட்ட அவுஸ்திரேலியா..அடித்து நொறுக்கிய தென் ஆப்பிரிக்கா
லக்னோவில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 311 ஓட்டங்கள் குவித்துள்ளது.
டி காக் சதம்
தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா 35 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து வந்த வான் டெர் டுசன் 26 ஓட்டங்கள் ஓட்டங்களில் அவுட் ஆனார். மறுபுறம் டி காக் சரவெடியாய் வெடித்தார்.
AFP
ஆனால் அவுஸ்திரேலியாவின் ஃபீல்டிங் வழக்கத்திற்கு மாறாக படுமோசமாக கேட்ச்களை கோட்டைவிட்டனர்.
Getty Images
அதிரடியாக சதம் விளாசிய டி காக் 109 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மார்க்கரம் 56 ஓட்டங்களும், கிளாசென் 29 ஓட்டங்களும், யென்சன் 26 ஓட்டங்களும் எடுத்தனர்.
[
படுமோசமான ஃபீல்டிங்
தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்கள் குவித்தது. அவுஸ்திரேலியாவின் ஸ்டார்க், மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளும், ஹேசல்வுட், கம்மின்ஸ் மற்றும் ஜம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Getty Images
விக்கெட் கீப்பர் இங்கிலிஸ், ஆடம் ஜம்பா, ஸ்டார்க், கம்மின்ஸ், ஸ்டோய்னிஸ் ஆகிய வீரர்களே மோசமாக சொதப்பினர்.
இந்தப் போட்டியில் 29 ஓட்டங்கள் எடுத்த கிளாசென் அதிவேகமாக 2000 ஓட்டங்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் 45 இன்னிங்ஸ்களில் இதனை எட்டியுள்ளார்.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |