352 இலக்கை ஊதித்தள்ளிய அவுஸ்திரேலியா! ஐசிசி தொடரில் இமாலய சாதனை
இங்கிலாந்து அணி நிர்ணயித்த இமாலய இலக்கை எட்டி அவுஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்து அணி 351
லாகூரில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 351 ஓட்டங்கள் குவித்தது. பென் டக்கெட் (Ben Duckett) 165 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட் 63 (66) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Just how good is Ben Duckett? 🔥 pic.twitter.com/1ICIwo1as1
— England Cricket (@englandcricket) February 22, 2025
ஹெட் (6), ஸ்மித் (5) சொதப்ப லபுஷேன் 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, ருத்ர தாண்டவம் ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் (Josh Inglis) சதம் விளாசினார்.
அபார வெற்றி
அவருக்கு உறுதுணையாக மேக்ஸ்வெல் அதிரடி காட்ட, அவுஸ்திரேலிய அணி 47.3 ஓவரிலேயே 356 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
கடைசி வரை களத்தில் நின்ற ஜோஷ் இங்கிலிஸ் 86 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 120 ஓட்டங்கள் எடுத்தார். க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) 15 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் விளாசினார்.
ஐசிசி தொடரில் பாரிய இலக்கை எட்டிய முதல் அணி என்ற வரலாற்று சாதனையை அவுஸ்திரேலியா படைத்துள்ளது.
Josh Inglis's first ODI ton gets Australia home in a classic! #ChampionsTrophy pic.twitter.com/Eo0dBkseOz
— cricket.com.au (@cricketcomau) February 22, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |