ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இவ்வளவு பெரிய மனசா? - நெகிழ வைக்கும் வீடியோ
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் செய்த செயல் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 556 ரன்களும், பாகிஸ்தான் 148 ரன்களும் எடுத்தன. 408 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 97 ரன்னில் டிக்ளேர் செய்ததால் பாகிஸ்தானுக்கு 506 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இமாலய இலக்கை நோக்கி 2வது இன்னிங்சில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 82 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்த நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. கைவசம் 8 விக்கெட் இருந்த நிலையில் 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதால் இப்போட்டியில் யார் ஜெயிப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறியது.
????? ???? ?????? ????? ????????? ???? ? ????????#BabarAzam? #AUSvsPAK pic.twitter.com/P4sCc8hHE0
— Ali Khanani (@AliKhanani12) March 16, 2022
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் - அப்துல்லா ஷபிக் ஜோடி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்துல்லா ஷபிக் 96 ரன்களில் ஆட்டமிழக்க, இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் 196 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இப்போட்டி டிராவில் முடிவடைந்தது.
இதனிடையே இப்போட்டியில் 425 பந்துகளை எதிர்கொண்டு 196 ரன்கள் விளாசிய பாபர் அசாம் அவுட்டான போது ஆஸ்திரேலிய வீரர்கள் அவரின் பேட்டிங் திறமையை பாராட்டினர். இதனைக் கண்ட ரசிகர்கள் இதுதான் உண்மையான விளையாட்டின் சக்தி என கருத்துகளை தெரிவித்துள்ளனர்.