உலகக்கோப்பையில் கடைசி பந்து வரை திக் திக்..நூலிழையில் நியூசிலாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா
உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இமாலய இலக்கு
நிர்ணயித்த அவுஸ்திரேலியா தரம்சாலாவில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 388 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹெட் 109 ஓட்டங்களும், வார்னர் 81 ஓட்டங்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் போல்ட், பிலிப்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், சான்ட்னர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Twitter (@mufaddal_vohra)
மிட்செல் 54
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கான்வே 28 ஓட்டங்களும், வில் யங் 32 ஓட்டங்களும் எடுத்து ஹேசல்வுட் ஓவரில் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் கைகோர்த்த ரச்சின் ரவீந்திரா, மிட்செல் கூட்டணி 96 ஓட்டங்கள் குவித்தது. ஆடம் ஜம்பா ஓவரில் மிட்செல் 54 ஓட்டங்களில் இருந்தபோது ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து வந்த லாதம், பிலிப்ஸ் இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
AFP
ரச்சின் ரவீந்திரா அரைசதம்
எனினும் ரச்சின் அதிரடியில் மிரட்டினார். அவர் 77 பந்துகளில் சதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 293 ஆக உயர்ந்தபோது கம்மின்ஸ் ஓவரில் ரவீந்திரா 116 (89) ஓட்டங்களில் அவுட் ஆனார். சான்ட்னரும் 17 ஓட்டங்களில் வெளியேற அவுஸ்திரேலியா கட்டாயம் வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால், ஜிம்மி நீஷாம் அவுஸ்திரேலியாவுக்கு பயத்தை காட்டினார். சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் கடைசி பந்துவரை போட்டியை கொண்டு சென்றார்.
நியூசிலாந்தின் வெற்றிக்கு 2 பந்துகளில் 7 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், நீஷம் ஷாட் அடித்துவிட்டு ரன் ஓடினார். ஆனால் அவர் இரண்டாவது ரன்னை எடுக்க ஓடும்போது லபுசாக்னே த்ரோ செய்ய அதனை மிரட்டலாக பிடித்து இங்கிலிஸ் ரன்அவுட் செய்தார்.
கடைசி பந்தில் வெற்றி
இதனால் ஒரு பந்தில் 6 ஓட்டங்கள் அல்லது சிக்ஸர் விளாச வேண்டிய நிலை உருவானது. பரபரப்பான கடைசி பந்தை ஸ்டார்க் டாட் பந்தாக வீச, அவுஸ்திரேலியா 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
Twitter
அவுஸ்திரேலியாவின் தரப்பில் ஜாம்பா 3 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Neesham fought till the end ???#Crickettwitter #AUSvNZ #CWC23 pic.twitter.com/t5HwN5jb5Z
— Sportskeeda (@Sportskeeda) October 28, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |