அவுஸ்திரேலியாவின் தலைவிதியை தீர்மானிக்கும் இலங்கை! இறுதிப்போட்டிப் போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அவுஸ்திரேலிய அணி செல்லுமா என்பது இலங்கை அணியின் கையில் உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வென்றதன் மூலம், சூன் மாத உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தங்கள் இடத்தை உறுதி செய்துள்ளது.
ஆனால், இரண்டாவது அணி எது என்பதில் கேள்வி எழுந்துள்ளது. இதுவரை அவுஸ்திரேலிய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றாலும், இலங்கை அணிக்கு எதிரான தொடர்தான் அதனை நிர்ணயம் செய்யும்.
இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற மெல்போர்ன் மற்றும் சிட்னி டெஸ்ட்களில் வெற்றி பெற வேண்டும். இதன்மூலம் 60.53 புள்ளிகளை இந்திய அணி பெறும். ஆனால், 4வது டெஸ்ட் டிராவில் முடியவே அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே, கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றாலும் அவுஸ்திரேலிய அணிக்கு இறுதிப்போட்டிக்கு வாய்ப்பு அதிகம். ஏனெனில், அவுஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்தத் தொடரில் அவுஸ்திரேலிய அணி 2-0 என வென்றால் 58.77 புள்ளிகள் பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும். எனவே, இலங்கை அணியின் கையில்தான் அவுஸ்திரேலியாவின் இறுதிப்போட்டி கனவு உள்ளது.
எனினும் மெல்போர்ன், சிட்னி டெஸ்ட்களில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றாலே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.
மாறாக, இந்தியாவுக்கு எதிராக ஒரு வெற்றி ஒரு டிரா செய்தால், கண்டிப்பாக இலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக அவுஸ்திரேலியா கைப்பற்ற வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |