டி20 தொடரில் 3-0 வெற்றி! நியூசிலாந்தை துவம்சம் செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி
அவுஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
3வது டி20 போட்டி
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இன்று ஞாயிற்றுக்கிழமை Auckland, Eden Park மைதானத்தில் 3வது டி20 போட்டி நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்கத்தில் தடுமாறினாலும் நடுவில் சிறப்பாக விளையாடிய அவுஸ்திரேலிய அணி 10.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்கள் குவித்தது.
மத்தேயு ஷார்ட்(Matthew Short) 11 பந்துகளில் 27 ஓட்டங்கள் குவித்தார். மழை குறுக்கிட்டதால் நியூசிலாந்து வெற்றி இலக்கு 126 ஓட்டங்கள் ஆக குறைக்கப்பட்டது.
3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி
அவுஸ்திரேலிய அணியின் அபாரமான பந்து வீச்சில் திணறிய நியூசிலாந்து வீரர்கள் 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 98 ஓட்டங்கள் மட்டுமே குவித்தனர்.
இதன் மூலம் DLS முறைப்படி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று கணக்கில் வெற்றி பெற்று, டி20 உலகக் கோப்பைக்கான அற்புதமான தொடக்கத்தை அவுஸ்திரேலிய அணி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
australia t20 series win,
australia vs new zealand t20 series,
australia t20 series highlights,
new zealand t20 series loss,
australia t20 series scorecard,
australia t20 series player of the series,
australia t20 series match reports,
australia t20 series analysis, Australia washout New Zealand in t20 series 3-0,matthew short