U19 உலகக்கிண்ணம் ; வைபவ் சூரியவன்ஷியின் சாதனையை முறியடித்த அவுஸ்திரேலிய வீரர்
அவுஸ்திரேலிய வீரர் வில் மலாஜ்சுக், அதிவேக U19 சதத்தில் வைபவ் சூரியவன்ஷியின் சாதனையை முறியடித்துள்ளார்.
U19 உலகக்கிண்ணம்
U19 உலகக்கிண்ணம் , ஜனவரி 15 ஆம் திகதி தொடங்கி, பிப்ரவரி 6 ஆம் திகதி வரை ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது.

Credit : ICC
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஜப்பான் அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் குவித்தது.

Credit : ICC Cricket World Cup/X
202 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி, 29.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 204 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் மூலம், அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வில் மலாஜ்சுக்
அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான Will Malajczuk, அதிரடியாக ஆடி 55 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 102 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் சாதனையை வில் மலாஜ்சுக் முறியடித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி, கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில், 52 போட்டியில் சதமடித்து, U19 ODI போட்டியில் அதிவேக சதமடித்த வீரர்களின் பட்டியலில் 2வது இடத்தில் இருந்தார்.
நேற்றைய போட்டியில் 51 பந்துகளில் சதமடித்து, வில் மலாஜ்சுக் வைபவ் சூர்யவன்ஷியின் சாதனையை முறியடித்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர் சமீர் மின்ஹாஸ், இந்த தொடரில் ஜிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில், 42 பந்துகளில் சதமடித்து U19 ODI போட்டியில் அதிவேக சதமடித்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
மேலும், இதன் மூலம் U19 உலகக்கிண்ண தொடரில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் வில் மலாஜ்சுக் படைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |