196 ஓட்டங்கள் வெற்றி இலக்கு.. 82 ஓட்டங்களில் சுருண்ட நியூசிலாந்து! முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா
ஒருநாள் போட்டியில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆடம் சம்பா
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கெய்ர்ன்ஸின் கசலிஸ் மைதானத்தில் நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் வார்னர் (5), பின்ச் (0), லபுசாக்ஃனே (5), ஸ்டோய்னிஸ் (0) ஆகியோர் போல்ட் மற்றும் ஹென்றி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் கேரி 12 ஓட்டங்களில் சான்ட்னர் பந்துவீச்சிலும், மேக்ஸ்வெல் 25 ஓட்டங்களில் போல்ட் பந்துவீச்சிலும் அவுட் ஆகினர்.
In the middle earlier than he'd like, but Steve Smith is looking comfortable already #AUSvNZ pic.twitter.com/l8q4EQE0E4
— cricket.com.au (@cricketcomau) September 8, 2022
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் மறுபுறம் அரைசதம் கடந்த ஸ்டீவன் ஸ்மித் 94 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டார்க் 38 ஓட்டங்களும், ஹேசல்வுட் 23 ஓட்டங்களும் எடுத்து களத்தில் நின்றனர்.
That's more like it!
— cricket.com.au (@cricketcomau) September 8, 2022
Glenn Maxwell goes big on a short one from Santner #AUSvNZ pic.twitter.com/9Cq2uhyI7X
இதன்மூலம் அவுஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 38 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது.
SEED!
— cricket.com.au (@cricketcomau) September 8, 2022
Adam Zampa delivers a beauty #AUSvNZ pic.twitter.com/a6d50xsEtz
அதன் பின்னர் அவுஸ்திரேலியாவின் ஆடம் சம்பா தனது மாயாஜால சுழற்பந்துவீச்சில் மிரட்டினார். அவரது பந்துவீச்சில் மிட்சேல் (10), சௌதி (2), ஹென்றி (5) மற்றும் போல்ட் (9) ஆகியோர் ஆட்டமிழந்தனர். 16 ஓட்டங்கள் எடுத்த சான்ட்னர் களத்தில் நின்றார்.
நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து 33 ஓவர்களில் 82 ஓட்டங்களில் சுருண்டது. அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் ஆடம் சம்பா 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் அப்போட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.