சொந்த மண்ணிலேயே நியூசிலாந்துக்கு மரண அடி கொடுத்த அவுஸ்திரேலியா
வெல்லிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், வெல்லிங்டனின் Basin Reserve மைதானத்தில் நடந்தது.
கேமரூன் கிரீன் 174 ஓட்டங்கள் விளாச, அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 383 ஓட்டங்கள் குவித்தது. மேட் ஹென்றி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
If any equivocation lingered as to the rare talent Cameron Green offered Australia, it was removed over the past few days in Wellington@ARamseyCricket | #NZvAUS https://t.co/gTv55byekC
— cricket.com.au (@cricketcomau) March 3, 2024
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து 179 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதற்கு பதிலடியாக, 2வது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியாவை 164 ஓட்டங்களுக்கு சுருட்டியது நியூசிலாந்து.
இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு 369 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லாதம் (8), வில் யங் (15), வில்லியம்சன் (9) சொதப்பினர்.
எனினும் ரச்சின் ரவீந்திரா, டேர்ல் மிட்செல் கூட்டணி 67 ஓட்டங்கள் எடுத்தது. 59 ஓட்டங்கள் எடுத்திருந்த ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் டாம் பிளெண்டல் ரன் எடுக்காமலும், க்ளென் பிலிப்ஸ் ஒரு ரன்னிலும் நாதன் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் மிட்செல் வெற்றிக்காக போராடினார்.
ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. கிரீன் பந்துவீச்சில் 26 ஓட்டங்கள் எடுத்திருந்த ஸ்காட் குஃகெலேஜின் அவுட் ஆக, மேட் ஹென்றி 14 ஓட்டங்களில் வெளியேறினார்.
Shamar Joseph, Aamir Jamal and now Glenn Phillips - the Aussies have found their hands full from little-known rivals this summer@ARamseyCricket | #NZvAUS https://t.co/glM5BudNMH
— cricket.com.au (@cricketcomau) March 2, 2024
கடைசி விக்கெட்டாக டேர்ல் மிட்செல் (38) அவுட் ஆக, நியூசிலாந்து அணி 196 ஓட்டங்களுக்கு சுருண்டது. நாதன் லயன் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதன்மூலம் 172 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. கேமரூன் கிரீன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |