மும்முனை தாக்குதலில் சீர்குலைந்த தென் ஆப்பிரிக்கா! வாகைசூடிய கம்மின்ஸ் படை
பிரிஸ்பேன் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
முதல் டெஸ்ட் போட்டி
அவுஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 152 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்னர் ஆடிய அவுஸ்திரேலியா 218 ஓட்டங்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து 66 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
@AP
99 ஓட்டங்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா
கம்மின்ஸ், ஸ்டார்க் மற்றும் போலந்தின் மும்முனை தாக்குதலினால் தென் ஆப்பிரிக்க அணி 99 ஓட்டங்களுக்கு சுருண்டது. கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் போலந்து தலா 2 விக்கெட்டுகளையும், லயன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
எளிய இலக்கு
இதனால் 34 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா, 4 விக்கெட்டுகளை இழந்து 35 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்காவின் ரபடா 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அவுஸ்திரேலியாவை மிரள வைத்தார். 92 ஓட்டங்கள் எடுத்த அவுஸ்திரேலியாவின் டிராவில் ஹெட் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
@AFP
@AFP