மீண்டும் மீண்டும் குறுக்கிட்ட மழை..DLS முறையில் வங்கதேசத்தை வென்ற அவுஸ்திரேலிய அணி
டி20 உலகக்கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 28 ஓட்டங்கள் (DLS) வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
கம்மின்ஸ் 3 விக்கெட்
அவுஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கிண்ணப் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது.
முதலில் ஆடிய வங்கதேசம் அணி 8 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் சேர்த்தது. ஷாண்டோ 41 ஓட்டங்களும், ஹிரிடோய் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.
அவுஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஜம்பா 2 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல், ஸ்டார்க் மற்றும் ஸ்டோய்னிஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி களமிறங்கியபோது மழை குறுக்கிட்டது. எனினும் சிறிது நேரம் கழித்து களமிறங்கிய வார்னர், ஹெட் அதிரடியில் மிரட்டினர். அணியின் ஸ்கோர் 65 ஆக உயர்ந்தபோது டிராவிஸ் ஹெட் (Travis Head) 31 (21) ஓட்டங்கள் எடுத்து ரிஷாத் ஹொசைன் ஓவரில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த அணித்தலைவர் மிட்செல் மார்ஷ் ஒரு ரன்னில் வெளியேற, டேவிட் வார்னர் (David Warner) அரைசதம் அடித்தார்.
DLS முறைப்படி வெற்றி
கிளென் மேக்ஸ்வெல் 6 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 14 ஓட்டங்கள் எடுக்க மீண்டும் மழை குறுக்கிட்டது.
இதன் காரணமாக அவுஸ்திரேலிய அணி DLS முறைப்படி, 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வார்னர் ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் எடுத்தார். வங்கதேச தரப்பில் ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
Pat Cummins hat-trick, Mitch Starc's world record and a blazing David Warner fifty proved too much for Bangladesh on a wet night in Antigua @LouisDBCameron | #T20WorldCup
— cricket.com.au (@cricketcomau) June 21, 2024
Report, video etc: https://t.co/edij9BYOXB pic.twitter.com/V07Wvddg6V
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |