டிராவில் முடிந்த சிட்னி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய கம்மின்ஸ் படை
சிட்னியில் நடந்த அவுஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
கடைசி டெஸ்ட் போட்டி
அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது.
அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 475 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 255 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது.
@AP Photo/Rycroft
@AP Photo/Rycroft
டிராவில் முடிந்த போட்டி
பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி கடைசி நாளில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது போட்டி டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.
@REUTERS/Jaimi Joy
அவுஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த டெஸ்டில் அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன் விருதை 195 ஓட்டங்கள் விளாசிய கவாஜாவும், தொடர் நாயகன் விருதை டேவிட் வார்னரும் கைப்பற்றினர்.
@AFP