ஆசிய நாடொன்றில் மனைவியை சந்திக்கவிருந்த அவுஸ்திரேலிய நபர் கடத்தல்: அதிகரிக்கும் அச்சம்
Aussie activist abducted in cambodia before meet his wife: கம்போடியாவில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சமூக ஆர்வலர் ட்ரான் ஹியப், கம்போடியாவில் மனைவியை சந்திப்பதற்கு முன் கடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மெல்போர்னைச் சேர்ந்த சமூக ஆர்வலர்
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்த சமூக ஆர்வலர், ஜனநாயகப் பிரச்சாரகராக அறியப்படுபவர் ட்ரான் ஹியப் (50).
இவர் மனித உரிமைப் பாதுகாவலர்களை சந்திப்பதற்காக கம்போடியாவின் புனோம் பென் நகருக்கு சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தனது மனைவி குளோயி டாங்கை பாங்காக்கில் சந்திக்கவிருந்த ட்ரான் ஹியப், வியட்நாமிய அதிகாரிகளால் கடத்தப்பட்டதாக ஜனநாயக ஆதரவு புலம்பெயர் அரசியல் கட்சியான வியட் டான் குற்றம்சாட்டியது.
எந்தத் தகவலும் இல்லை
கம்போடியாவில் பயிற்சி பெறுவதற்காக, வியட்நாமிய-நோர்வே மனித உரிமை ஆர்வலர் நுயென் டுக் துவானுடன் அவர் பயணம் செய்துகொண்டிருந்தார்.
பின்னர் அவர் விமானத்தில் ஏறவே இல்லை என்றும், செப்டம்பர் 18 முதல் அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
'பன்னாட்டு அடக்குமுறை' நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ட்ரான் ஹியப் வியட்நாமிய அதிகாரிகளால் கடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டதையடுத்து, கம்போடியாவில் மாயமான ட்ரான் ஹியப் குறித்து அச்சம் அதிகரித்து வருகிறது.
