இலங்கைக்கு அனுப்ப இருந்த பாப்கார்ன்: சோதனையிட்டபோது காத்திருந்த அதிர்ச்சி
இலங்கை, தென் கொரியா நாடுகளுக்கு அவுஸ்திரேலிய ஊர்வன உயிரினங்களை கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
பாப்கார்ன், பிஸ்கட் டின்கள்
அவுஸ்திரேலிய வனவிலங்குகள் வெளிநாடுகளில் மிகவும் விரும்பப்படுகின்றன. குறிப்பாக அவுஸ்திரேலிய ஊர்வன அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு அனுப்ப இருந்த பாப்கார்ன், பிஸ்கட் டின்களின் பைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது உள்ளூர் பல்லிகள், டிராகன்கள் மற்றும் பிற ஊர்வன அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பில் 61 வயதான நீல் சிம்ப்சன் என்ற நபரை கைது செய்த அதிகாரிகள், அவரை நீதிமன்றத்தில் நிறுத்த அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிய வந்தது.
சிட்னியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் நீல் சிம்ப்சனுக்கு 5 ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் பரோல் இல்லாத கால அவகாசம் வழங்கியது. மேலும், குற்றத்தில் பங்கேற்றதற்காக மேலும் மூன்று பேர் தண்டிக்கப்பட்டனர்.
101 அவுஸ்திரேலிய ஊர்வன
அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "ஹாங்காங், தென் கொரியா, இலங்கை மற்றும் ருமேனியாவுக்கு அனுப்பப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட பார்சல்களில் இருந்து 101 அவுஸ்திரேலிய ஊர்வன மீட்கப்பட்டன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 15 தொகுப்புகளில் இதுபோன்ற உயிரினங்கள் அனுப்பப்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை அனுமதியின்றி ஏற்றுமதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |