ஒரு பெப்பரோனி பீட்சாவால் ஐந்து மாதம் சிறை தண்டனை அனுபவித்த அவுஸ்திரேலியர்
அமெரிக்காவில், தனது தோழியின் கடன் அட்டையைப் பயன்படுத்தி பீட்சா ஆர்டர் செய்ய முயன்றதற்காக, ஐந்து மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்ததாக அவுஸ்திரேலியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக அமெரிக்காவில்
தோழியின் அனுமதியின்றி அவரது கடன் அட்டையைப் பயன்படுத்திய நிலையில், கைதான அந்த நபர் மூன்று சிறைகளுக்கு மாற்றப்பட்டு, பின்னர் நாடுகடத்தப்பட்டுள்ளார்.

ஜேம்ஸ் என்பவர் தனக்கு 15 வயதிருக்கும் போதே அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ளார். பாடசாலைப் படிப்பை முடித்து இரண்டு வருட பல்கலை படிப்பின் போது அவரது மாணவருக்கான விசா ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த ஜேம்ஸ், ஒருமுறை நண்பர்களுடன் சேர்ந்து, தமது தோழியின் கடன் அட்டையில் பீட்சா வாங்க முடிவு செய்துள்ளனர்.
முறையற்ற முறையில்
ஆனால், 10 நிமிடங்களில் ஆர்டர் திடீரென்று ரத்தாகியுள்ளது. இதனையடுத்து ஜேம்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் கடைக்கு நேரிடையாக சென்றுள்ளனர்.
பீட்சா சாப்பிட்டுவிட்டு குடியிருப்புக்கு திரும்பிய ஜேம்ஸ், குடியிருப்பின் அருகே பொலிஸ் வாகனங்கள் கண்டு பதறியுள்ளார். உண்மையில் ஜேம்ஸின் தோழியே தமது கடன் அட்டையைப் பயன்படுத்தியது தொடர்பில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து ஜேம்ஸ் மீது கடன் அட்டையை முறையற்ற முறையில் பயன்படுத்துதல் மற்றும் மோசடி உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

சுமார் 12 மணி நேரம் காத்திருந்ததன் பின்னர், விடிகாலை 2 மணியளவில் ஜேம்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் அந்த அறையில் மேலும் 50 கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். மூன்று சிறைகளில் மொத்தம் ஐந்து மாதங்கள் சிறை தண்டனைக்குப் பின்னர் ஜேம்ஸ் அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |