அவுஸ்திரேலியாவில் 5 மாத குழந்தை துயர மரணம்! பெண்ணை விளாசும் மக்கள்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பெண்ணொருவர், காரை ரிவர்ஸ் எடுத்ததால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து மாத குழந்தை உயிரிழந்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
துயர மரணம்
சிட்னியின் தென்மேற்கில் உள்ள மின்டோ மாலில், பெண்ணொருவர் பார்க்கிங்கில் இருந்து தனது காரை பின்னால் எடுத்துள்ளார்.
அப்போது ஐந்து மாத பெண் குழந்தை இருந்த ப்ராம் (குழந்தை வாகனம்) மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குழந்தைக்கு CPR அளித்துள்ளனர். மேலும் துணை மருத்துவர்கள் கூடுதல் சிகிச்சை அளித்தனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது.
இந்த சம்பவம் 5 வயது சிறுவன் காயமடைந்தார்.
பின்னர் அவர் வெஸ்ட்மீட் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
கேள்வி எழுப்பும் மக்கள்
35 வயது பெண்ணொருவர் சக்கரத்தின் பின்னால் இருந்ததால் காயமடையவில்லை என்றும், அவர் குழந்தைக்கு தெரிந்தவர் என்பதையும் NSW பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ள பொலிஸார், இச்சம்பவத்தை ஒரு துயரமான விபத்தாக கருதுவதாக புதிய தகவல்கள் வெளிவருகின்றன.
குறித்த பெண் காரை முன்னோக்கி நகர்த்த முயன்று, தவறுதலாக ரிவர்ஸ் எடுத்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய பெண் இயக்கிய கார், பின்புறக் காட்சி ரிவர்சிங் கமெராக்கள் பொருத்தப்பட்ட மொடல் என்றும், அப்படி இருந்தும் அவர் எப்படி குழந்தை மீது மோதினார் என்று கொந்தளிப்புடன் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில் கலக்கமடைந்த உள்ளூர்வாசிகள், விபத்து நடந்த இடத்தில் பூக்கள் மற்றும் பொம்மைகளை வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |