மெக்சிகோவிலிருந்து 1.3 மில்லியன் மதிப்புள்ள..கடத்தலில் ஈடுபட்ட அவுஸ்திரேலியர் அதிரடி கைது
1.3 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியார் கைது செய்யப்பட்டார்.
4 கிலோ போதைப்பொருள்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் தென்மேற்கில் உள்ள ஆபர்ன் மற்றும் பாஸ் ஹில்லில் உள்ள இரண்டு சொத்துக்களில் பொலிஸார் சோதனை நடத்திய பின்னர், முகமது அலமெடின் என்ற 22 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்தனர்.
அவர் மெக்சிகோவின் Chihuahuaயில் இருந்து சிட்னி நகருக்கு ஒரு சரக்கு விமானத்தில் 4 கிலோ கோகைனை இறக்குமதி செய்யும் திட்டத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. அதன் மதிப்பு 1.3 மில்லியன் டொலர்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், அது conveyor belt gear என்று பெயரிடப்பட்டு, Bass Hillக்கு அனுப்பப்பட்டதும் தெரிய வந்துள்ளது. அலமெடின் இருமுறை போன் செய்து சரக்கினை அனுப்பும் நபரிடம் அதன் நிலை குறித்து கேட்டதாக பொலிஸார் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆயுள் தண்டனை
செப்டம்பர் மாதம் அவுஸ்திரேலிய எல்லைப்படை அதிகாரிகளால் இந்த இறக்குமதி கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸாருக்கு இதனை தெரியப்படுத்தினர். 
இதற்கிடையில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் நான்கு செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள் உட்பட பல பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், எல்லைக் கட்டுப்பாட்டு போதைப்பொருளை வணிக ரீதியாக இறக்குமதி செய்ததாகவும் அலமெடின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Parramatta உள்ளூர் நீதிமன்றத்தில் நிறுத்த காவலில் வைக்கப்பட்டுள்ள அலமெடின், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையை எதிர்கொள்வார் என்று கூறப்படுகிறது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |