ஒரே ஆண்டில் 20,000 பேர்களுக்கு மேல் இறப்பு: பீதியில் அவுஸ்திரேலிய மக்கள்
அவுஸ்திரேலிய நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டுக்கான இறப்பு கணக்கெடுப்பில் எப்போதும் விட இந்த ஆண்டு அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலால் அந்நாட்டு மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
2022க்கான கணக்கெடுப்பு
அவுஸ்திரேலியா நாட்டின் அக்டுவாரைஸ் எனும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான இறப்புகள் குறித்த கணக்கெடுப்பில் கிட்டதட்ட 20000 பேர் கொரானா நோய்த் தொற்றால் உயிரிழந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.
@getty images
2022 ஆம் ஆண்டில் மட்டும் 12% இறப்பு விகிதம் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
தொடரும் அச்சம்
கொரானா நோய்த் தொற்றால் மட்டும் 10,300 பேர் இறந்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் ஏற்கனவே கொரானாவிலிருந்து மீண்டவர்களுக்கு அதன் பக்க விளைவால் ஏற்படும் உடல் பாதிப்பால் 2900 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மீதமுள்ள 6600 இறப்புகள் கொரானா தொற்றால் தான் இறந்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களில்லை.
@Nine
கடந்த ஆண்டில் மொத்தம் 172000 பேர் உயிரிழந்துள்ளனர். இது முன்பைவிட 12% அதிகப்படியான எண்ணிக்கை எனத் தெரிய வந்துள்ளது. இறப்பினை கணக்கெடுத்த ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை அதிகாரி இலாயின் கிரேஸ் கூறியாவதாவது
” நாட்டின் எல்லையோர பகுதியில் நிறையப் பேர் கொரானா தொற்றுக்குப் பயந்து புலம்பெயர்ந்து சென்று விட்டார்கள். 12 மாதங்களில் 12% இறப்பென்பது எப்போதை விடவும் அதிகப்படியானது தான்” என அவர் கூறியுள்ளார். இந்த அறிக்கையால் அவுஸ்திரேலிய மக்கள் கொரானா தொற்று இன்னும் தொடர்கிறதா என்ற அச்சத்திலிருக்கிறார்கள்.