இந்தியாவை ஊதி தள்ளி உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது அவுஸ்திரேலியா
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
நியூசிலாந்தில் மார்ச் 4ம் திகதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின.
இந்தத் தொடரில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோதும். அதாவது, லீக் சுற்றில் ஒரு அணி 7 போட்டிகளில் விளையாடும்.
லீக் சுற்று முடிவில் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிக்கு அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். மற்ற நான்கு அணிகள் தொடரிலிருந்து வெளியேறும்.
இந்நிலையில் இன்று இந்திய மகளிர் அணி தனது 5வது போட்டியில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலியா அணியுடன் மோதியது, அவுஸ்திரேலியாவுக்கு இது 5வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்லாந்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் மிதாலி ராஜ் 68 ரன்கள் எடுத்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்தார்..
அவுஸ்திரேலிய தரப்பில் பந்து வீச்சில் Darcie Brown 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
278 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 49.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது.
அவுஸ்திரேலிய தரப்பில் அந்த அணியின் கேப்டன் Meg Lanning 97 ரன்கள் விளாசி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
Meg Lanning is named player of the match for her exceptional knock.#MegLanning #CWC22 pic.twitter.com/Scsc4vJ464
— CricTracker (@Cricketracker) March 19, 2022
6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
அவுஸ்திரேலியா அணி விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றிப்பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி விளையாடி 5 போட்டிகளில் 2 வெற்றி 3 தோல்வி என 4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் இந்திய அணி வங்க தேசத்தையும், தென் ஆப்பிரிக்காவையும் எதிர்கொள்ளவுள்ளது.
மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றிப்பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.