அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை தாக்கவிருக்கும் புயல்: 2,00,000 பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம்
அவுஸ்திரேலியாவை திடீரென தாக்கிய புயலால் ஏற்பட்ட வெள்ளம் முக்கிய நகரான சிட்னியை நோக்கி நகர்வதால், சுமார் 2,00,000 மக்களை உடனடியாக நகரை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலியாவின் அவசரகால சேவை அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் 5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய நகரான சிட்னி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் என மொத்தம் 400 கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்டுள்ள கடற்கரை பகுதிகளுக்கு கடுமையான மழை மற்றும் புயல்காற்றுக்கான எச்சரிக்கையை அவுஸ்திரேலியாவின் அரசு அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
திடிரென உருவான இந்த புயலானது, குயின்ஸ்லாந்து முதல் நியூ சவுத் வேல்ஸ் வரையிலான கிழக்கு கடற்கரையில் தெற்கு நோக்கி நகர்ந்ததால், ஆறுகள் மற்றும் நீர் தேக்கங்களில், கரைகள் உடைந்து நியூ சவுத் வேல்ஸ் நகரத்தின் பெரும்பகுதிகள் நீரில் காணப்படுகின்றன.
1/4 We woke up this morning to large parts of the state underwater. There are now 76 current evacuation orders, 18 evacuation warnings and about half a million people affected by these floods. pic.twitter.com/RD70IaQAyf
— Dom Perrottet (@Dom_Perrottet) March 3, 2022
இதனால் சுமார் 2,00,000 மக்களை அவர்களது வீடுகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் மேலும் 3,00,000 மக்களை வெளியேற தயாராக இருக்குமாறும் அவுஸ்திரேலியாவின் அவசரகால சேவை அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த புயலானது, அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரான சிட்னியை நோக்கி நகர்ந்து வருவதால், பொதுமக்கள் அனைவருக்கும் புயல் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நியூ சவுத் வேல்ஸ் வானிலை ஆய்வாளர் டீன் நரமோர் பேசுகையில், அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் இந்த புயல் காரணமாக 50 முதல் 150 மிமீ வரை மழை பெய்யக்கூடும் எனவும், இடியுடன் கூடிய மழைப்பெய்யும் பகுதிகளில் இந்த மழையின் அளவானது மாறுபடும் எனவும் எச்சரித்துள்ளார்.
மேலும் இந்த புயலால், சிட்னி நகரின் நீர் தேக்கங்களில் பாதிப்பு ஏற்பட்டு பயங்கரமான வெள்ளம் ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளது.
Dangerous #thunderstorms are pummelling flood-affected parts of southeast #Qld and northeast #NSW this morning, with more on the way later today. ⛈
— Weatherzone (@weatherzone) March 2, 2022
More at https://t.co/Ao1VzviIPx pic.twitter.com/7uOWXFwVci