அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பையை வென்று அசத்திய இந்தியா
ஆசிய நாடுகளுக்கு இடையே நடைபெறும் 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது.
இதன் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 50 ஓட்டங்களில் சுருட்டியதுடன் 6.1 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்கள் குவித்து ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணி அடுத்ததாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலியிலும், அடுத்து இந்தூர் மற்றும் ராஜ்கோட்டிலும் நடைபெற உள்ளது.
இந்திய அணி அறிவிப்பு
இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுல், ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ஆர்.அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ESPN
முன்னணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, ஆகிய இருவருக்கும் முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடாத ஸ்ரேயாஸ் ஐயர் இந்த அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |