69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்தியா ஏ அணி; ODI தொடரை வென்ற அவுஸ்திரேலியா
australia a won india by 69 runs seal odi series: 2வது ODI போட்டியில், இந்தியா ஏ அணியை 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா ODI தொடரை வென்றுள்ளது.
ODI தொடரை வென்ற அவுஸ்திரேலியா ஏ அணி
இந்தியா ஏ மற்றும் அவுஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி, இன்று புதுச்சேரியில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் ஆடிய அவுஸ்திரேலியா ஏ அணி, 49.5 ஓவர்கள் முடிவில் 275 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அவுஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கோன்ஸ்டாஸ் 67 ஓட்டங்களும், ஜோஷ் பிலிப் 58 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அர்ஷத் கான் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
276 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணி, 45.2 ஓவர்களுக்கு 206 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 67 ஓட்டங்கள் குவித்தார்.

அவுஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்பென்சர் ஜான்சன் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதன் மூலம், 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அவுஸ்திரேலிய ஏ அணி.
மேலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.