அவுஸ்திரேலியாவை 99 ஓட்டங்களில் சுருட்டிய தென்னாப்பிரிக்கா; 10 ஆண்டுகளில் 3வது முறை
australia all out for 99 runs vs sa, 3rd time in decade: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், அவுஸ்திரேலியா 99 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது.
99 ஓட்டங்களில் சுருண்ட அவுஸ்திரேலியா
தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது.
தென் ஆப்பிரிக்கா அணி முதலில் விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், அணித்தலைவரான டெம்பா பவுமா, நிதானமாக ஆடி சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார்.

அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்கா தரப்பில், டெம்பா பவுமா 179 ஓட்டங்கள் குவித்தார்.
9 விக்கெட் இழப்பிற்கு 425 ஓட்டங்கள் குவித்து தென்னாப்பிரிக்கா அணி டிக்ளேர் செய்தது.
அதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய அவுஸ்திரேலிய அணி மளமளவென விக்கெட்களை இழந்து, 99 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக, ஸ்டீவ் ஸ்மித் 28 ஓட்டங்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சென் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

அதைத்தொடர்ந்து 2 வது இன்னிங்க்ஸை ஆட தொடங்கிய அவுஸ்திரேலிய அணி, 2 விக்கெட்களை இழந்து 102 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 3வது முறை
கடந்த பத்தாண்டுகளில் அவுஸ்திரேலியா 100 ஓட்டங்களுக்கும் குறைவாக ஆட்டமிழப்பது இது மூன்றாவது முறையாகும்.

முன்னதாக 2016 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 85 ஓட்டங்களிலும், 2023 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு எதிராக 91 ஓட்டங்களிலும் ஆல் அவுட் ஆனது.
ஸ்டீவ் ஸ்மித் சாதனை
28 ஓட்டங்கள் குவித்த ஸ்டீவ் ஸ்மித், டெஸ்டில் 11,000 ஓட்டங்களை கடந்துள்ளார்.

இதன்மூலம், ஆலன் பார்டர், ரிக்கி பாண்டிங்கிற்கு அடுத்தபடியாக டெஸ்டில் 11,000 ஓட்டங்களை கடந்த 3வது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.