பசிபிக்கில் ஓங்கும் சீனாவின் கை! கைகோர்த்த இரண்டு முக்கிய நாடுகள்: இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம்!
அவுஸ்திரேலியா மற்றும் வனுவாட்டு நாடுகளுக்கு இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்
500 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் மதிப்பில் அவுஸ்திரேலியா மற்றும் வனுவாட்டு(Vanuatu) நாடுகளுக்கு இடையே 10 ஆண்டு கால பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
பல மாத பேச்சுவார்த்தைக்கு பிறகு நாகமல்(Nakamal) என பெயரிடப்பட்ட ஒப்பந்தம் உடன்பாட்டிற்கு வந்துள்ளது.
இது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், செப்டம்பர் மாதம் இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகிறது.
தலைவர்கள் நம்பிக்கை
நாம் ஒரே குடும்பம், நம்முடைய எதிர்காலம் மிகப்பெரிய அளவில் ஒன்றிணைந்துள்ளது என அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
வனுவாட்டு(Vanuatu) நாட்டின் தலைவர் யோதாம் நாபாத், இருநாடுகளுக்கும் இது வெற்றி-வெற்றி நிலை என குறிப்பிட்டுள்ளார்.
பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கிற்கு மத்தியில் அவுஸ்திரேலியாவின் நிலையை வலுப்படுத்தும் மூலோபாய திட்டத்துடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |